InformationNeeds.com
Home/கட்டுரைகள்/கனவில் கோவில் மற்றும் தெய்வங்களைக் காண்பதன் பலன்கள் | Benefits of seeing temple and deities in dream
Spirituality

கனவில் கோவில் மற்றும் தெய்வங்களைக் காண்பதன் பலன்கள் | Benefits of seeing temple and deities in dream

June 7, 2024uma566 views


கனவில் கோவில் மற்றும் தெய்வங்களைக் காண்பதன் பலன்கள்:

1. உங்கள் கனவில் கோவில் கண்டால் கடவுள் அருளால் நினைத்த காரியம் விரைவில் நிறைவேறும்.
2. தெய்வத்திடம் பேசுவது போல் கனவு காண்பது சுபமே. நன்மை உங்களை விரைவில் தேடி வரும் என்பதைக் குறிக்கிறது. 
3. கோவிலின் கதவைத் திறந்து உள்ளே நுழைவது போல் கனவு கண்டால், புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள் என்று அர்த்தம். 
4. கோவிலுக்குள் செல்ல முடியாமல் கூட்ட நெரிசலில் சிக்கித் தவிப்பது போல் கனவு கண்டால் எதிர்பாராத பிரச்சனைகளால் அவதிப்படுவீர்கள் என்று அர்த்தம். எனவே உங்களின் வளர்ச்சியை சிலர் தடுக்க முயல்கிறார்கள் என்பதை உணர்ந்து செயல்படுவது நல்லது. 
5. கடவுளை கனவில் கண்டால் பிரச்சனைகள் நீங்கும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். திருமண தடை நீங்கி நல்ல வரன் கிடைக்கும். யாராலும் உங்களை வெல்ல  முடியாது. 
6. கோவிலில் நாம் தனியாக இருப்பதாகவும், கதவு மூடப்பட்டிருப்பதாகவும் கனவு காண்பது வியாபாரத்தில் தேக்கத்தைக் குறிக்கிறது.
7. உங்கள் கனவில் தெப்பத்தைக் கண்டால், உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும்.
8. இறைவனுக்கு மாலை அணிவிப்பதை கனவில் கண்டால் லாபகரமான செயல்களில் ஈடுபடுவீர்கள். நல்ல வளர்ச்சியை அடைவீர்கள். பல பாக்கியங்கள் பெற்று நிம்மதியாக வாழ்வீர்கள்.
9. காளி தேவியை கனவில் பார்ப்பது குடும்பத்தில் சண்டை சச்சரவுகளைக் குறிக்கிறது.
10. உங்கள் கனவில் கோபுரத்தைக் கண்டால், இனிமேல் நீங்கள் உயர்ந்த கொள்கைகளைக் கடைப்பிடிப்பீர்கள், அதன் மூலம் வாழ்க்கையில் முன்னேறுவீர்கள் என்று அர்த்தம், மேலும் கனவில் கோவில் கோபுரத்தைக் கண்டால் பாவங்கள் நீங்கியதைக் குறிக்கிறது.
11. கோயிலில் பிரசாதத்தைப் பெறுவது போல் கனவு காண்பது சில நபர்களால் தொல்லைகள் ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.